சுயநினைவின்றி கிடந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாம்பே ஜெயஸ்ரீ
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்பட பாடல்களை பாடி இருப்பவர் தான் பாம்பே ஜெயஸ்ரீ.
2023க்கான சங்கீத கலாநிதி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட இருக்கிறது. மெட்ராஸ் மியூசிக் அகாடமி வழங்கும் அந்த விருது கர்நாடக சங்கீதத்தில் உயரிய விருதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
மூளையில் ரத்தக்கசிவு
தற்போது லண்டன் சென்றிருக்கும் பாம்பே ஜெயஸ்ரீ அங்கு University of Liverpoolல் வரும் வெள்ளிக்கிழமை பாட இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஹோட்டல் அறையில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரை சுயநினைவுக்கு கொண்டு வர மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை பிரியா பவானி ஓபன் டாக்