பொம்மை திரை விமர்சனம்
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள படம் பொம்மை. இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ளார். பொம்மையுடன் காதல் என்ற வித்தியாசமான கதைக்களம் தான் இப்படத்தின் மீது முதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
அதை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா - பிரியா பவானி ஷங்கர் இணைந்து மான்ஸ்டர் எனும் ஹிட் படத்தை ஏற்கனவே கொடுத்துள்ளதால், அதே எதிர்பார்ப்பு பொம்மை மீதும் வந்தது.
மேலும், அபியும் நானும், மொழி என எப்போதும் மனதை தொடும் படங்களை எடுத்த ராதா மோகன் இப்படியொரு கதைக்களம் எப்படி கையாண்டுள்ளார் என்றும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர். இப்படி ரசிகர்கள் வைத்திருந்த பல எதிர்பார்ப்பை பொம்மை திருப்திபடுத்தியதா இல்லையா வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..
கதைக்களம்
சிறு வயதில் நந்தினி எனும் பெண்ணை கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யா காதலிக்கிறார். இருவரும் பள்ளி பருவத்தில் நன்றாக பழகுகிறார்கள். தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்த எஸ்.ஜே. சூர்யாவிற்கு துணையாக நிற்கும் வகையில் நந்தினியின் உறவு ஏற்படுகிறது.
ஆனால், இந்த உறவும் எஸ்.ஜே. சூர்யாவிற்கு நீடிக்கவில்லை. ஒரு நாள் ஊர் திருவிழாவில் நந்தினியை சிலர் கடத்தி விடுகிறார்கள். இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் எஸ்.ஜே. சூர்யா, சில மன ரீதியான நோயால் பாதிக்கப்படுகிறார். இதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஜவுளி கடையில் அழகுக்காக நிற்க வைக்கப்படும் பொம்மைகளுக்கு கண், புருவம் போன்ற அம்சங்களை வரையும் வேலை செய்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.
இந்த சமயத்தில் ஒரு நாள் பார்க்க பெண் போலவே இருக்கும் பொம்மை ஒன்றுக்கு அம்சங்களை வரைய துவங்குகிறார். அப்போது திடீரென தனது கடந்தகால வாழ்க்கையில் வந்த தனது காதலி நந்தினி என்ற பெண்ணின் முகமும் இந்த பொம்மையும் ஒரே மாதிரி இருப்பது போல் அவருக்கு தெரிகிறது.
இதனால் அந்த பொம்மையை தனது நந்தினி என நினைந்து கொண்டு பொம்மையிடம் கற்பனை உலகில் வாழுகிறார். இப்படியொரு மனநிலையில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவால் என்னென்ன விபரீதங்கள் நடந்தது.. இதிலிருந்து அவர் வெளியே வந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிந்தாலும், அதை கச்சிதமாக கையாண்டுள்ளார். அதே போல் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரின் நடிப்பு பாராட்டுக்குரியது.
எந்த ஒரு குறையும் இல்லாமல் அழகாக நடித்து அசத்திவிட்டார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாந்தினி தான் ஏற்ற நடித்துள்ள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
இயக்குனர் ராதாமோகன் எதிர்பார்த்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. வழக்கமான கதைக்களம் இல்லை என்றாலும், சுவாரஸ்யம் இல்லாத காரணத்தினால் படம் போர் அடிக்கிறது.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் உள்ள தொய்வு படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை ஓகே. ஆனாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.. ஒளிப்பதிவு, எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம்.
பிளஸ் பாயிண்ட்
எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பு
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை
மொத்தத்தில் பொம்மை ஏமாற்றம்..
ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? Twitter விமர்சனம் இதோ