நடிகை ஸ்ரீதேவி படத்தில் இந்த இளம் நடிகை நடிக்கிறாரா?- Biopic ஆ, போனி கபூர் சொன்ன விஷயம்
நடிகை ஸ்ரீதேவி
இந்திய சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பிரபலத்தின் இழப்பு என்றால் அது நடிகை ஸ்ரீதேவி தான்.
தனது உடலை எப்போதும் பிட்டாக வைத்துக்கொள்ள டயட், உடற்பயிற்சி என தனது உடல்நலத்தில் அக்கறை காட்டி வந்தவர். திடீரென வந்த அவரது இறப்பு செய்தி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
நடிகையின் படம்
தற்போது நடிகை ஸ்ரீதேவியின் படம் குறித்த ஒரு தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அண்மையில் ஒரு திரைப்பட விருது விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பேசும்போது, எனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி நடித்த கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாம் படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளது.
அதில் என் மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.