அழகாக காணப்பட தனது உணவில் ஸ்ரீதேவி செய்த கட்டுப்பாடு, அதனால் வந்த உடல்நலக்குறைவு... போனி கபூர் ஓபன் டாக்
நடிகை ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் இருந்து இந்திய சினிமா ஏன் ஹாலிவுட் சினிமா வரை புகழ்பெற்ற ஸ்ரீதேவி இப்போது நம்முடன் இல்லை என்பது அனைவருக்குமே வருத்தமாக உள்ளது.
அண்மையில் ஸ்ரீதேவி பெயரில் மும்பையில் ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது. அவரது மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் நாயகியாக களமிறங்கி நடித்து வருகிறார்.
போனி கபூர்
அண்மையில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தனது மனைவியின் உடல்நலம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஸ்ரீதேவி எப்போதுமே தனது தோற்றத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார்.
அவர் அடிக்கடி க்ரைஷ் டயட் முறைகளை மேற்கொண்டார். சில சமயங்களில் தான் விரும்பிய தோற்றத்தை அடைய சாப்பிடாமல் பட்டினி கிடந்தார், அது அவரது உடல்நிலையை பாதித்தது.
எங்களது திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதேவிக்கு லோ பிபி பிரச்சனை இருந்தது. அவரின் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளால் அவரின் உடல்நலப் போராட்டங்கள் அதிகரித்தன.
அதனால் அடிக்கடி உப்பு இல்லாமல் சாப்பிட்டு வந்தார், வெளியே ஹோட்டல் சென்றாலும் உப்பு இல்லாத உணவை தான் நாடினார் என்றார்.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
