முக்கிய ஹீரோ பற்றி போனி கபூர் காட்டமாக சொன்ன கருத்து! என்ன ஆனது?
சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாலிவுட் சினிமா பற்றி சொன்ன கமெண்ட் இணையத்தில் பேசுபொருளானது. "பாலிவுட்டால் நான் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாது, அதனால் அங்கு நடித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" என கூறி இருந்தார்.
பாலிவுட் சினிமா துறையை இப்படி அவர் அசிங்கப்படுத்திவிட்டாரே என பலரும் கருத்து கூறினார்கள். பாலிவுட் சினிமா துறையை சேர்ந்த பலரும் மகேஷ் பாபுவை தாக்கி பேசி இருந்தனர்.
போனி கபூர் கருத்து
இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் படம் தயாரித்து வரும் போனி கபூர் அளித்திருக்கும் பேட்டியில் மகேஷ் பாபு பற்றி பேசி இருக்கிறார்.
"நான் இரண்டு துறைகளிலும் படங்கள் எடுக்கிறேன். இதுபற்றி கருத்து கூற நான் சரியான ஆள் இல்லை. மகேஷ் பாபு என்ன நினைக்கிறாரோ அதை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்கு காரணங்கள் அவரிடம் இருக்கலாம். அதை பற்றி நான் ஏன் கமெண்ட் செய்ய வேண்டும்."
"அவர் அப்படி சொல்கிறார் என்றால், அது அவருக்கு நல்ல விஷயமாக இருக்கும்" என போனி காட்டமாக கூறி இருக்கிறார்.