என் உயிர் இருக்கும் வரை அது நடக்காது- மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து போனி கபூர் அதிரடி
நடிகை ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது ஒரு பிரபலம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார்.
சினிமாவில் பீக்கில் இருந்த போதே அதாவது 1996ம் ஆண்டு போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
2018ம் ஆண்டு துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பு திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகையின் பயோபிக்
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையில் ஒரு பேட்டியில், அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார், அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும்.
அதனால் அவரது பயோபிக் உருவாகாது, நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
