தல 61 படம் குறித்து வெளியான தகவல்.. தயாரிப்பாளரே வெளியிட்ட அறிவிப்பு
போனி கபூர் தயாரிப்பில், தல அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை.
எச்.வினோத் இயக்கி இருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும், தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri