விஜய் ரசிகர்கள் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறிய பெருமையான விஷயம்- வைரலாக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருக்கிறார்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது ரசிகர்களின் சண்டைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெரிய விஷயமாக இருந்தது.
சண்டைகள் கொஞ்சம் மோசமாக செல்ல மற்ற பிரபலங்கள் அஜித்-விஜய் இருவரும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல பேட்டிகள் கொடுத்தார்கள், இப்போது அப்படிபட்ட சண்டைகள் இல்லை.
தற்போது அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. புரொமோஷன் எல்லாம் பலமாக உள்ளது, அடுத்தடுத்து ரசிகர்களே எதிர்ப்பார்க்காத வண்ணம் டீஸர்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார். விஜய் ரசிகர்கள் அவருக்கு மிகவும் விசுவாசமாக உள்ளார்கள்.
அவர்கள் அஜித்தின் வலிமை படத்தை கூட பாராட்டுகிறார்கள் என பேட்டி கொடுத்த அதை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
.@BoneyKapoor about My #ThalapathyVijay Fans ?❤#Beast @actorvijay #Thalapathy66https://t.co/wZQtSTszht pic.twitter.com/6ZFVF2T0LY
— Jelshiya? (@JelshiyaVJ) February 17, 2022