தயாரிப்பாளர் போனி கபூரா இது, உடல் எடையை குறைத்து சுத்தமாக ஆளே மாறிவிட்டாரே.. வைரலாகும் போட்டோ
ஸ்ரீதேவி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகையாக இருந்தவர் தான் ஸ்ரீதேவி.
இவரது கணவர் போனி கபூர், தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் ஒரு விஷயம் செய்துள்ளார், அதுதான் இப்போது வைரலாகி வருகிறது.
என்ன விஷயம்
பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களை தயாரித்துள்ளார். தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
கொஞ்சம் குண்டாக இருந்த இவர் எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் 26 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். காலையில் பழச்சாறு, சப்பாத்தி மட்டும் தானாம், இரவில் சாப்பாடு கிடையாது வெறும் சூப் மட்டும் தானாம்.
டையட் மட்டுமே பின்பற்றி 26 கிலோ வரை எடையை குறைத்தாராம். என்னுடைய மனைவி, முதலில் உங்கள் உடல் எடையை குறையுங்கள், பிறகு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்பார்.
ஒருநாள் நான் என்னையே சமாதானம் செய்துகொண்டு முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்வந்தேன். தற்போது உடல் எடையையும் குறைத்து மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன் என கூறியுள்ளார்.