AK61 தயாரிப்பாளர் போனி கபூரிடம் பல லட்சம் ருபாய் கிரெடிட் கார்டு மோசடி! போலீசில் புகார்
முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரிடம் 4 லட்சம் ருபாய் கிரெடிட் கார்டு மோசடி நடந்திருப்பது தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. இது பற்றி போலீசில் அவர் புகார் அளித்து இருக்கிறார்.
பிப்ரவரி 9ம் தேதி மொத்தம் 5 transactionகளில் போனி கபூரின் கார்டை பயன்படுத்தி 3.82 லட்சம் ருபாய் எடுக்கப்பட்டு இருக்கிறது. அது பற்றி பின்னர் அறிந்த போனி கபூர் வங்கியில் அது பற்றி கேட்டிருக்கிறார். அதற்க்கு பிறகு மும்பை அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து இருக்கிறார்.
Information Technology Act படி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். போனி கபூரிடம் யாரும் போனில் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்கவும் இல்லை, அதனால் இந்த மோசடி எப்படி நடந்திருக்கும் என விசாரணை நடக்கிறது.
லீக் ஆன நயன்தாரா - விக்கி திருமண அழைப்பிதழ்! திருப்பதி இல்லை.. திருமணம் இந்த இடத்தில் தான்