துபாயில் நடிகை ஸ்ரீதேவி மரணத்தின் போது என்ன நடந்தது?- 5 ஆண்டுக்கு பின் முதன்முறையாக பேசிய போனி கபூர்
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா ரசிகர்கள் இழந்த ஒரு அருமையான நடிகை தான் ஸ்ரீதேவி. 1980களில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் நாயகியாக கொடிகட்டி பறந்தவர் இவர்.
அந்த காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் இவர்தான். சினிமாவில் டாப்பில் இருந்தபோதே 1996ம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
போனி கபூர் விவாகரத்து ஆனவராக இருந்தாலும் அவர்மீது உள்ள காதலால் நடிகை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
மரணம் குறித்து பிரபலம்
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றபோது, அங்கு ஓட்டல் அறையில் உள்ள பாத் டப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் போது நடந்தது என்ன என்பதை போனி கபூர் அண்மையில் மனம் திறந்து பேசி உள்ளார்.
போனி கபூர் கூறியதாவது, ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது தற்செயலாக நடந்த ஒன்று. அவரது மரணம் குறித்து 24 முதல் 48 மணிநேரம் விசாரணை நடந்தது.
விசாரணையின் போது தொடர்ந்து மரணத்தை பற்றியே பேசப்பட்டதால், அந்த சமயத்தில் அதைப்பற்றி மேலும் பேச வேண்டாம் என முடிவு செய்தேன்.
இந்திய ஊடகங்களில் இருந்து அதிகளவில் அழுத்தம் இருந்ததன் காரணமாகவே இந்த அளவுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
சோதனை மேற்கொள்ளப்பட்டபோது ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவரது மரணம் தற்செயலானது என அறிக்கை வெளியிடப்பட்டது என்றார்.