போனி கபூரின் போட்டோவால் கடுப்பான ரசிகர்கள், அப்படி என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க..
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு போனி கபூர் தயாரித்துள்ள வலிமை திரைப்படம் முந்தைய படத்தை விட அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.
வலிமை படத்திற்கு பிறகும் இந்த கூட்டணி மீண்டும் அடுத்த படத்திற்காக இணையவுள்ளது, அப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது, ஆனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசருக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு "My First Crush" என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் செம கடுப்பான ரசிகர்கள் அவரின் அந்த புகைப்படத்திற்கு கடுமையான கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.