ஸ்ரீதேவியை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பரப்பிய தயாரிப்பாளர்கள்.. உண்மையை உடைத்து பேசிய போனி கபூர்
ராஜமாதா சிவகாமி தேவி
இந்திய சினிமாவிற்கு மாபெரும் பெருமை செர்த்த திரைப்படங்களில் ஒன்று பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு இணையான பாத்திரம் ராஜமாதா சிவகாமி தேவி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அவருடைய கம்பீரமான நடிப்பு இந்த கதாபாத்திரத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.
ஆனால், முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன் கிடையாது. நடிகை ஸ்ரீதேவியை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ராஜாமொலி அணுகியுள்ளார். அவரது வீட்டிற்கு சென்று இப்படத்தின் கதையை கூறியுள்ளார். ஸ்ரீதேவிக்கு கதை மிகவும் பிடித்துபோக நடிக்கிறேன் என கூறியுள்ளார்.
ஆனால், ஸ்ரீதேவி ரூ. 10 கோடி சம்பளம், ஹோட்டலில் கூடுதலாக ஒரு அறை, மற்றும் படப்பிடிபுக்கு தான் வரும்போது குழந்தைகளுக்கும் கூடுதலாக விமான டிக்கெட்டுகள் கேட்டதால் ஸ்ரீதேவி இந்த படத்தில் இருந்து தவிர்க்கபட்டதாக ராஜமௌலி நேர்காணல்களில் கூறியுள்ளார்.
உண்மையை கூறிய போனி கபூர்
இந்த நிலையில், இதுகுறித்து ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பளாருமான போனி கபூர் விளக்கமளித்தார். சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்காக ஸ்ரீதேவியைதான் ராஜமௌலி அணுக நினைத்தது உண்மைதான். அவர் வீட்டிற்கே வந்து கதை கூறினார். இந்த கதாபாத்திரத்தின் மீது ஸ்ரீதேவிக்கு ஆர்வம் எற்ப்பட்டதால், அவர் மீது ராஜமௌலிக்கு மேலும் மரியாதை கூடியது.
ஆனால், பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு ராஜமௌலி அல்ல, அப்படத்தின் தயாரிப்பாளர்கள்தான் காரணம். ராஜமௌலி கதை சொல்லிவிட்டு சென்ற பிறகு, தயாரிப்பாளர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சம்பளம் பேசினார்கள். ஆனால், ஸ்ரீதேவி வழக்கமாக பெற்று வந்த சம்பளத்தை விட குறைவான சம்பளம்த்தை வழங்க முன்வந்தனர். இதன் காரணமாகதான் தனது மனைவி ஸ்ரீதேவி பாகுபாலி படத்தில் இருந்து விலகினார் என போனி கபூர் விளக்கமளித்தார்.
மேலும், தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் தவறாக பரப்பிவிட்டதாகவும் போனி கபூர் கூறினார். ஹோட்டலில் ஒரு தளத்தை முன்பதிவு செய்ய கேட்டது உண்மைதான் என்றும், எனென்றால் அப்போது தங்களது குழந்தைகள் சிறியவர்கள் என்றும், அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும்பொது பெரிய கால்ஷீட்களை கேட்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டதாகவும் போனி கபூர் ஒப்புகொண்டார்.
ஆனால், தயாரிப்பாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஸ்ரீதேவி அந்த பாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும், இதன் விளைவாக தயாரிப்பளர்கள் ஸ்ரீதேவியை பற்றி தவறாக ராஜமௌலியிடம் கூறிவிட்டதாகவும் போனி கபூர் கூறியுள்ளார்.