வலிமை மிகப்பெரிய வசூல், எல்லா படங்களை விட அதிகமா?: போனி கபூர் கொடுத்த பேட்டி
அஜித்தின் வலிமை பற்றித்தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் இந்த படம் 36.17 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வந்தது.
மேலும் இரண்டாம் நாளில் சென்னை பகுதியில் வசூல் முதல் நாளை விட சற்று குறைவு தான் என தெரிகிறது. ஆனால் வார இறுதி நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்து இருக்கும் பேட்டியில் வலிமை வசூல் பற்றிய முழு விவரம் எண்ணிடம் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை, ஆனால் விநியோகஸ்தர்கள் மூலமாக கிடைத்த தகவல்படி இதுவரை வந்த படங்களை விட இந்த படத்தில் வசூல் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தான் சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை என் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமாட்டேன் எனவும் கூறி உள்ளார் போனி கபூர்.