வலிமை படத்தில் அஜித் செய்த விஷயம், வியந்துபோன போனி கபூர்- அவரே வெளியிட்ட செம தகவல்
அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கியது. கொரோனா பிரச்சனை காரணமாக அப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்து முடிந்தே விட்டது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே சிறந்த போஸ்டர் டிசைனர் ஒருவர் தான் வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக்கை டிசைன் செய்கிறாராம்.
படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் படத்தை பற்றிய எந்தஒரு அப்டேட்டும் இல்லை. ரசிகர்கள் கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டார்கள். படக்குழுவினரோ அப்டேட் சரியான நேரத்திற்கு கண்டிப்பாக வரும் என்கின்றனர்.
இந்த நிலையில் தான் இப்பட இயக்குனர் போனி கபூர் மற்றும் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சூப்பர் புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது.
இப்போது என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூரின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் சரித்திர வெற்றியை இப்படம் பதிவு செய்யும் என்பதை மட்டும் இப்போது உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
பைக் சேஸிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.
அவரது உழைப்புக்கு பலன் இல்லாமலா போகும் என கூறியுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
