சினிமாவில் நடிக்க மாட்டேன்! பிரபல நடிகரின் அதிரடி! ஏன் இந்த திடீர் முடிவு! உண்மை இதோ!
சினிமாவுக்கு அரசியலுக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது. சினிமாவை சேர்ந்தவர்கள் அரசியலில் பணியாற்றி வருவது இடைவிடாத நிகழ்வாகிவிட்டது. தற்போது நடிகர் போஸ் வெங்கட் வரபோகும் தேர்தலில் போட்டியிட களத்தில் இறங்கியுள்ளார்.
கடந்த வருடம் வெளியான கன்னி மாடம் படத்தில் இயக்குனராக அறிமுகமானதோடு முதல் படத்திலேயே வெற்றியும் பெற்றுவிட்டார்.
பல படங்களில் நடித்துள்ள அவர் இன்னும் நம் மனதில் மெட்டி ஒலி சீரியலில் வீட்டில் மூத்த மருமகனாக நடித்த போஸாகவே உள்ளார்.
திமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ள அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாராம்.
ஸ்டாலின் எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயமாக அறந்தாங்கியில் வெற்றி பெறுவேன். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அந்த ஐந்த ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன், சென்னைக்கு வரமாட்டே, தொகுதிக்காக முழுமையாக பாடுபடுவே என கூறியுள்ளார்.