Bouma (மலையாளம்): திரை விமர்சனம்

By Tony Nov 14, 2026 11:11 AM GMT
Report

திலீஷ் போத்தன், வினீத், அதிதி பாலன், ரேவதி சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள Bouma மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Bouma (மலையாளம்): திரை விமர்சனம் | Bouma Movie Review

கதைக்களம்

கேரளாவில் போலீஸாக பணியாற்றி வரும் ஈஷோ, காணாமல்போன பெண் ஒருவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்குகிறார். அச்சமயத்தில் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு என, நள்ளிரவு 2 மணியளவில் ஹோட்டல் மாடி ஒன்றில் கூட்டம் நடத்தப்படுகிறது.

அங்கு சென்று விசாரிக்கும் ஈஷோ அங்குள்ள நபர்கள் குறித்த விவரங்களை வாங்கிக் கொள்கிறார். அதே சமயம் கிளப்பில் பாடகராக இருக்கும் செலின் தனது ஆண் நண்பர் ஜேக்கப் உடன் ஒன்றாக வசிக்கிறார்.

ஒருநாள் அவரைத் தேடி வரும் வழக்கறிஞர், 90களில் நடந்த ரோஸ் வில்லா கொலைகள் என்ற சம்பவத்தைப் பற்றி கூறுகிறார். 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய குழந்தைதான் செலின் என்ற விஷயத்தை வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.

Bouma (மலையாளம்): திரை விமர்சனம் | Bouma Movie Review

அத்துடன் செலினுக்கு 25 வயது பூர்த்தியானதும், அந்த ரோஸ் வில்லா எஸ்டேட் பங்களாவை ஒப்படைக்க வேண்டும் என்ற உயிலைக் காண்பிப்பதுடன், அங்குள்ளவர்கள் இறந்தது குறித்த விஷயங்கள் அடங்கிய கோப்பினையும் கொடுக்கிறார். மேலும், அந்த பங்களாவை வாங்குவதற்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகவும் கூறுகிறார்.

கோப்புகளை பெற்றுக்கொண்டு கிளம்பும் செலின், அதில் உள்ள விஷயங்களை படிக்கிறார். அதில் தனது அம்மா மர்மமான முறையில் முதலில் இறந்தது தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதையும் அறிகிறார். அதே சமயம் ஈஷோ தேடிக் கொண்டிருக்கும் பெண் சடலமாக ரயில்வே தண்டவாளத்தில் கிடைக்கிறார்.

அவரை உடற்கூறாய்வு செய்தபோது அது கொலை என்பது தெரிய வருகிறது. எஸ்டேட் பங்களாவின் மர்மம் என்ன? ஈஷோ எப்படி அதைக் கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

2023யில் பென்டுலம் என்ற படத்தை இயக்கிய ரெஜின் எஸ்.பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். எஸ்டேட் பங்களாவில் நடந்த மர்ம சம்பவங்கள் குறித்த கதையாக ரெஜினே எழுதியும் இருக்கிறார். வழக்கமான மலையாள திரில்லர் பட பாணியிலேயே இந்தப் படமும் மெதுவாக ஆரம்பிக்கிறது.

ஆயினும் ஒவ்வொரு ட்விஸ்டும் வெளிப்படும்போது நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது. இதுதான் கதையாக இருக்கும் என்று நாம் யூகிக்கும்போது, இயக்குநர் வேறொன்றைக் கூறி மாற்றுவது நல்ல ரைட்டிங்.

Bouma (மலையாளம்): திரை விமர்சனம் | Bouma Movie Review

I Play Rocky: திரை விமர்சனம்

I Play Rocky: திரை விமர்சனம்

ஒரு சில ஹாலிவுட் படங்கள், தமிழில் கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு படத்தின் கதைக்கரு இதுதான். அவையெல்லாம் இப்படம் பார்க்கும்போது நினைவில் வந்தாலும் கிரைம் நாவல் படிப்பதுபோன்ற திரைக்கதை சுவாரஸ்யப்படுத்துகிறது.

கிளைமேக்ஸ் கண்டிப்பாக யூகிக்க முடியாத உள்ளது. கிரிஸ்டோ சேவியரின் பின்னணி இசை த்ரில் மொமெண்ட்டை கொடுக்க உதவியுள்ளது. திலீஷ் போத்தன், சாகர் சூர்யா, அதிதி பாலன் என படத்தில் நடித்த அனைவரும் அட்டகாசம் செய்துள்ளனர்.

குறிப்பாக வினீத் கிளைமேக்சில் மிரட்டியிருக்கிறார். டெக்னிக்கலாக மிகவும் வலுவான படம்தான். ஷாரன் வேலாயுதனின் ஒளிப்பதிவு சிறப்பு. சூரஜின் படத்தொகுப்பு நேர்த்தி.

க்ளாப்ஸ்

  • திரைக்கதை
  • கிளைமேக்ஸ்
  • ட்விஸ்ட்கள்

பல்ப்ஸ்

  • மெதுவாக நகரும் திரைக்கதை சிலருக்கு செட் ஆகாமல் போகலாம்

மொத்தத்தில் இந்த பௌமா மிஸ்ட்ரி திரில்லர் ரசிகர்களுக்கானது. கண்டிப்பாக ஒருமுறை விசிட் அடிக்கலாம்.

Bouma (மலையாளம்): திரை விமர்சனம் | Bouma Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US