வில்லனை போல நிஜத்திலும் சிலரை மிரட்டிய நடிகர் அஜித்- அவர்களே சொன்ன விஷயம், எதற்காக தெரியுமா?
நடிகர் அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர். தல என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் அவரே நேற்று இனி என்னை தல என்றோ வேறு அடைமொழி வைத்தோ அழைக்காதீர்கள், அஜித், AK என்று எனது பெயரை வைத்து மட்டும் அழையுங்கள் என அறிக்கை வெளியிட்டார்.
சில ரசிகர்கள் அஜித்தின் இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் சில பவுன்சர்கள் அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளனர். அஜித்துடன் இருக்கும் போது அவர் முதலில் எங்களை கேட்பது சாப்டாச்சா என்று தான்.
2, 3 முறை போய் சாப்பிடுங்கள் என்பார், அப்போது நாம் செல்லவில்லை என்றால் படத்தில் வில்லனை மிரட்டுவது போல் மிரட்டு எங்களை சாப்பிட அனுப்புவார்.
பின் சாப்பிட்டு வந்த போதும் சாப்டாச்சா என்று கேட்டு உறுதிப்படுத்துவார் என கூறியுள்ளனர்.
6 மாதங்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர்: நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு News Lankasri
மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள் பணியிடை நீக்கம்: துருக்கி அரசு அதிரடி News Lankasri