வசூல் வேட்டையில் டிராகன்.. இதுவரை இத்தனை கோடியா!
டிராகன்
இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து வசூலில் வேட்டையாடி வருகிறது டிராகன்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஸ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
டிராகன் திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை படக்குழுவினர் அனைவரும் இணைந்து சமீபத்தில் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் 18 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் டிராகன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 18 நாட்களில் ரூ. 140 கோடி வரை வசூல் செய்துள்ளது.
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu