பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் 'குரூப்'.. இத்தனை கோடியா
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும் முன்னணி நடிகருமானவர் துல்கர் சல்மான்.
இவர் தமிழில் 'வாய்யை மூடி பேசவும்' எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதன்பின், மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்திருந்த, 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
சென்ற ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் தமிழுலும் முன்னணி நடிகராகிவிட்டார் துல்கர்.
மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான படம் குரூப். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 4.57 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
அதுமட்மின்றி சென்னையில் மட்டுமே ரூ, 81 லட்சம் வசூல் செய்து மாபெரும் படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.