மாபெரும் வெற்றியடைந்துள்ள குடும்பஸ்தன் படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா
குடும்பஸ்தன்
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம்.
மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் சான்வி மேக்னா. கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், 11 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது.