ஆண்கள் அணிக்குள் சண்டையை வர வைத்த தர்ஷா.. பிக் பாஸ் 8 புது ப்ரொமோ
பிக் பாஸ் 8வது சீசன் முந்தைய சீசன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் போட்டியாளர்கள் அடுத்த வீட்டை கெடுப்பது எப்படி என எல்லா நேரமும் யோசித்துக்கொண்டு இருப்பது போல தான் ஷோ சென்று கொண்டிருக்கிறது.
தற்போது ஆண்கள் டீமுக்கு பெண்கள் டீமில் இருந்து தர்ஷா குப்தா வந்திருக்கிறார். ஆண்கள் டீமில் பிரச்சனை வர வைக்க வேண்டும் என பல மோசமான செயல்களையும் தர்ஷா செய்து வருகிறார்.
ஆண்கள் டீமில் சண்டை
இந்நிலையில் அர்னாவ் தன்னிடம் வந்து பேசிய விஷயத்தை மற்ற ஆண்கள் எல்லோரிடமும் சொல்லி பெரிய சண்டையை கொண்டு வந்திருக்கிறார் தர்ஷா.
ஆண்கள் சண்டை போடுவது தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. இதோ.