சேரி மக்கள் பற்றி பேசியதற்கு வீடியோவில் மன்னிப்பு கேட்ட பிரிகிடா.. வழக்கு போடுவதாக மிரட்டினார்களா?
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்து இருக்கும் பிரிகிடா சமீபத்தில் ஒரு பேட்டியில் "சேரி மக்கள் அப்படிதான் பேசுவாங்க.. சேரிக்கு போனால் கெட்ட வார்த்தை தான் அதிகமா கேட்கும்" என கூறி இருந்தார்.
அவரது பேச்சு சர்ச்சை ஆன நிலையில் ட்விட்டரில் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ட்விட்டரில் பிரிகிடா மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். ஆனாலும் அவர் மீது வழக்கு தொடர போவதாக சிலர் மிரட்டி இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று பிரிகிடா உருக்கமாக வீடியோ வெளியிட்டு ட்விட்டரில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

"அந்த மாதிரி ஒரு கருத்து என் மனதில் இல்லை. எனக்கும் சேரி பகுதியில் இருந்து வந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நான் சொல்ல வந்த கருத்து வேற, அதை தவறாக மாற்றி சொல்லிவிட்டேன். அதற்காக மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என பிரிகிடா கூறி இருக்கிறார்.
மேலும் வழக்கு போடுவதாகவும் தனக்கு மிரட்டல் வந்தது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
— Brigida saga (@Brigidasaga22) July 19, 2022
எனக்காக எல்லாவற்றையையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக.. - மலேசியாவில் விஜய் உருக்கம் IBC Tamilnadu
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu