சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்! நிச்சயதார்த்த போட்டோ வைரல்
பாண்டி - மலர்
விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் பிரிட்டோ. அவர் அதில் நெகடிவ் ரோலில் நடித்தார். அதன் பின் ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது அதே சீரியலில் மலராக நடித்து வருகிறார் சந்தியா ராமச்சந்திரன். பாண்டி - மலர் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
திருமணம்
சீரியலில் ஜோடியாக நடிக்கும் சந்தியா ராமசந்திரன் மற்றும் பிரிட்டோ இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றிணைய இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது.
கடந்த ஜனவரி 25ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக போட்டோ வெளியிட்டு அவர்கள் அறிவித்து இருக்கின்றனர். தற்போது ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.