ஒரு குடும்பத்தை அழிச்சிட்டு.. 2ம் திருமணம் செய்த சமந்தாவை தாக்கி பதிவிட்ட பிரபல நடிகை?
நடிகை சமந்தா அவரது காதலர் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை கடந்த நவம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா போல அவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தான். The Family Man, Citadel: Honey Bunny போன்ற தொடர்களை இயக்கி இருக்கும் ராஜ் உடன் கடந்த சில வருடங்களாக சமந்தா காதலில் இருந்து வந்தார். அதன் பின் கோவை ஈஷா யோகா மையத்தில் நெருக்கமானவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு குடும்பத்தை அழித்தவர்: நடிகை குற்றச்சாட்டு
இந்நிலையில் பிரபல நடிகை பூனம் கவுர் (நெஞ்சிருக்கும் வரை - தமிழ் பட ஹீரோயின்) தற்போது சமந்தாவை தாக்கி பதிவிட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
"ஒரு குடும்பத்தை அழித்துவிட்டு உன்னுடையதை உருவாக்குகிறாய். பணம் இருந்தால் இதையும் வாங்கலாமா" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
சமந்தா 2ம் திருமணம் பற்றி தான் அவர் இப்படி பதிவிட்டாரா என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.