பிரதர் படம் 2 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை.
பிரதர்
இதனால் பிரதர் படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் கண்டிப்பாக ஜெயம் ரவிக்கு மட்டுமின்றி இயக்குனர் ராஜேஷிற்கும் கம் பேக் ஆக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், பிரதர் படமும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் பிரதர் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரதர் படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
