பிரதர் திரை விமர்சனம்
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
ஜெயம் ரவி சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார். ஆனால், போற இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேச, ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அப்பாவிற்கு நெஞ்சு வலி வர, இதுக்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார்.
ஜெயம் ரவியின் அக்கா பூமிகா இனி நான் தம்பியை பார்த்துக்கொள்கிறேன், அவனை ஒரு நல்ல பையனாக மாற்றுகிறேன் என தன் குடும்பத்திற்கு அழைத்து செல்கிறார்.
ஆனால், அங்கே சென்றதும் ஜெயம் ரவியால் அவர்கள் குடும்பமே பிரியும் நிலை ஏற்பட பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜெயம் ரவி-க்கு என்றே அளவு எடுத்து செய்த பேமிலி படம், அதை அவரும் திறம்பட செய்துள்ளார். பூமிகா குடும்பத்திற்குள் சென்ற பிறகு VTV கணேஷுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது, எமோஷ்னல் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.
இதை தாண்டி படத்தில் வந்த அனைவரும் எதோ நாடகத்தனமான நடிப்பு தான், அதிலும் சரண்யா பொன்வண்ணன் எல்லாம் எவ்வளவு யதார்த்தமாக நடிப்பவர், அவரே அவ்வளவு செயற்கை தனமாக நடித்துள்ளார்.
பூமிகா, ப்ரியங்கா மோகன் என அனைவரிடத்திலும் செயற்கை தனமே மிஞ்சியுள்ளது. நட்ராஜ் இருந்தாலே அந்த இடத்தை தன் நடிப்பால் ஆக்ரமிப்பார் என்பார்கள், ஆனால், இதில் எதோ சப்போர்ட்டிங் ஆக்டர் போல் அவர் வந்து செல்வது மிக வருத்தம், அதிலும் குழந்தைகள் நாடகத்தை பார்த்து மனம் மாறும் இடமெல்லாம் ஏன் ராஜேஸ் இவ்ளோ பழைய மசாலாவை அரைத்து வைத்துள்ளீர்கள் என்றே கேட்க தோன்றுகின்றது.
கண்டிப்பாக சந்தானம் இல்லாமல் ராஜேஸ் தடுமாறுவதை நன்றாக பார்க்க முடிகிறது, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையே மீண்டும் இந்த ஜெனரேஷன் கிட்ஸுகளுக்கு ராஜேஷ் எடுக்க முயற்சித்துள்ளார், அதில் மக்காமிஷி தவிற வேறு எதுவும் அவர்களுக்கு ஒட்டாது என்பதே உண்மை.
ஜெயம் ரவி கதாபாத்திரம் சரியா, தவறா என்ற குழப்பமே படம் முழுவதும் நீடிக்கிறது, அதுவே நம்மை படத்திலிருந்து விலகி வைக்கிறது, சந்தானம் பதில் VTV கணேஷ், ஆனால், அவரால் சந்தானம் இடத்தை நிரப்ப முடியுமா, MS பாஸ்கருடன் வரும் ஒரு காட்சி மட்டும் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவு ஊட்டியை செம கலர்புல்லாக காட்டியுள்ளனர், ஹாரிஸ் ஜெயராஜ் மக்காமிஷி, ஒரு அக்கா தம்பி செண்டிமெண்ட் பாடலில் ஸ்கோர் செய்ய, பின்னணி எல்லாம் ஹிந்தி சீரியல் போல் போட்டு வைத்துள்ளார்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதியில் வரும் சில காமெடி காட்சிகள்
பல்ப்ஸ்
சுவாரஸ்யமே இல்லாமல் செல்லும் திரைக்கதை.
மொத்தத்தில் 'முடியல' பிரதர்.

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
