அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர்களில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல்.
4 அண்ணன்-தம்பிகள் கதை தான் ஆனால் வித்தியாசமான கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் நிலாவின் அப்பா, சோழனிடம் போட்ட சவாலில் வெல்ல அவரது வீட்டிற்கு வருகிறார்.
மகளை பார்த்ததும் பாசம் இருப்பது போல் நடிக்கிறார், சேரன் சமைத்து போட்டு அவரை சாப்பிட வைக்கிறார்.
வீட்டிற்கு வந்த சோழன் நிலா அப்பாவை பார்த்து செம ஷாக் ஆகிறார். சேரன் வீட்டில் சோழனை பார்த்து நான் போட்ட சவாலில் கண்டிப்பாக ஜெயிப்பேன் என கூறுகிறார்.
வீடியோ
அடுத்து என்ன நிலா அவரது அப்பா பேச்சை நம்பி அவருடன் சென்றுவிடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நிலா அறைக்குள் வந்த ஒரு ஸ்பெஷல் கெஸ்ட்டின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அவரை அசால்ட்டாக தூக்கி செல்கிறார் பல்லவன். இதோ கலகலப்பான அந்த BTS வீடியோ,