மேடம்னு கூப்டு.. உனக்கு தகுதியே இல்லை! மீண்டும் தொடங்கிய சண்டை
பிக் பாஸ் 7ம் சீசனில் முதல் வாரத்திலேயே ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே சண்டை வெடித்து இருக்கிறது. எனக்கு படிப்பு வரல, அதனால் 9ம் க்ளாஸ் படிக்கும்போது நின்னுட்டேன் என ஜோவிகா சொல்ல, அதற்கு விசித்ரா எப்படியாவது 12வது படிக்க வேண்டும் என அட்வைஸ் கூறுகிறார். அது தான் தற்போது பெரிய பிரச்சனையாக வளர்ந்து நிற்கிறது.
என்னை எப்படி படிக்க சொல்லலாம், என் பர்சனல் விஷயத்தை பத்தி பேசாத என ஜோவிகா கத்தி சண்டை போட்டார். இந்த பஞ்சாயத்து இன்று கமல்ஹாசன் முன் வந்தது.
நானும் படிக்காதவன் தான் என ஜோவிகா பக்கம் சாய்த்த கமல், விசித்ரா சொன்னதும் தவறு இல்லை, இது ஜெனரேஷன் கேப் தான் காரணம் என கமல் கூறி இருக்கிறார்.
மேடம்னு கூப்டு
கமல் பேசி முடித்தபிறகு இடைவேளையில் ஜோவிகா இனி தன்னை மேடம் என்று தான் கூப்பிட வேண்டும், விச்சு என சொல்லி அழைக்கும் தகுதி போய்டுச்சு என விசித்ரா சொல்லி இருக்கிறார்.
இதை ஏன் இவ்ளோ aggressionஆ சொல்றீங்க என ஜோவிகா மீண்டும் சண்டையை தொடங்கி இருக்கிறார். வரும் நாட்களில் இவர்கள் இடையே சண்டை இன்னும் பெரிதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.