தனுஷ் vs நெட்பிலிக்ஸ்.. சென்னை நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதம்
நடிகர் தனுஷின் மற்றும் நயன்தாரா இடையே நடந்த மோதல் சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அதை தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த NOC வழங்கவில்லை என சொல்லி நயன்தாரா புகார் கூறினார். தனுஷ் தரப்பு எதிர்ப்பை மீறி நயன்தாரா அந்த காட்சிகளை பயன்படுத்தி இருந்தார்.
வழக்கு
இதற்கு 10 கோடி நஷ்டஈடு கேட்டு தனுஷ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அது பற்றிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது netflix தரப்பு இதற்கு எதிராக புது வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இது பற்றி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என நெட்பிலிக்ஸ் கூறி இருக்கிறது. ஆனால் நானும் ரௌடி தான் பட ஒப்பந்தம் சென்னையில் அலுவலகத்தில் தான் போடப்பட்டது, அதனால் இங்கே வழக்கை தொடுக்கலாம் என தனுஷ் தரப்பும் மாறி மாறி வாக்குவாதம் செய்து இருக்கின்றனர்.
இதன் விசாரணை தற்போது வேறு தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன தீர்ப்பு வர போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
