நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு
நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி ஆகியோர் பட தயாரிப்புக்காக வாங்கிய பல கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த வீடு நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அதில் அண்ணன் ராம்குமாருக்கு பங்கு இல்லை என்றும் தற்போது பிரபு எதிர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
நான் உதவ முடியாது
இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தபோது பிரபுவிடம் நீதிபதி "உங்கள் அண்ணன் கடன்களை நீங்க அடைத்துவிட்டு பின்னர் பெற்றுக்கொள்ளலாமே?" என கேட்டிருக்கிறார்.
அதற்கு பிரபு "அவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். என்னால் உதவ முடியாது" என கோர்ட்டில் கூறிவிட்டாராம்.