Captain America: Brave New World திரைவிமர்சனம்
கேப்டன் அமெரிக்கா மார்வல் இந்த முறை புதிய பரிமானத்தில் ரெட் ஹல்க் பலத்துடன் களமிறங்க, பழைய கேப்டன் அமெரிக்கா போல் இது ஹிட் அடித்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஹாரிஸன் போர்ட் அமெரிக்கா பிரசிடண்ட் ஆக பதவி ஏற்கிறார். அவருடன் கைக்கோர்த்து தற்போது உள்ள கேப்டன் மெரிக்கா சாம் பல வேலை செய்கிறார்.
அப்படி ஒரு மிஷினாக ஒரு அடிமேட்டியம்(விண்வெளியில் இருந்து வந்த ஒரு பொருள்) ஒன்றை வில்லனிடம் இருந்து கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார் கேப்டன்.
அதை தொடர்ந்து பிரசிடெண்ட் மாளிகையில் தன் நண்பர் ஐயிசா(முன்னாள் கேப்டன் அமெரிக்கா) உடன் ஒரு விருந்தில் பங்கேற்கிறார் கேப்டன்.
அப்போதும் ஐயிசா திடிரென் பிரசிடெண்ட்-யை சுட அவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைக்க, கேப்டன் அமெரிக்காவுக்கு இது சதி திட்டம் இதற்கு பின்னால் உள்ளது யார் என்பதை தேடி அதை அழித்து வழக்கம் போல் நாட்டை காப்பாற்றி தன் நண்பனையும் காப்பாற்றும் கதையே இந்த ப்ரேவ் நியூ வேல்ட்.
படத்தை பற்றிய அலசல்
சாம் கேப்டனாக பலரும் ஏற்றுக்கொள்வார்களா என்ற விவாதம் இந்த ப்ராஜெக்ட் தொடங்கும் போதே இருந்தது, ஆனால், படம் முடியும் போது இவர் சரி தான் என எண்ணம் அவர் கொண்டு வருவதே இந்த கேப்டனின் வெற்றி.
ஹாரிஸன் போர்ட் ஒரு மிலிட்டிரி ஆபிஸாரக இருந்து பிரிசிடெண்ட் ஆனார், அதுவும் அவர் ஹல்க் இரண்டாம் பாகத்தில் வந்த ப்ரூஸ் பேனர் காதலியின் தந்தை என காட்டியது எல்லாம் செம மார்வல் டச் . ஸ்டெண்ஸ் படத்தின் வில்லனாக வருகிறார்.
ஏதோ தானோஸ் போல் இருப்பார் என்று பார்த்தால் முழுவதும் தன் மூளையை பயன்படுத்தி தனக்கு நடந்த அநியாயத்துகாக ஹாரிஸன் போர்ட்-யை பழி வாங்க ரெட் ஹல்கை அவர் உடம்பிலிருந்து வெளியே வரும் காட்சி மிரள வைத்துள்ளனர்.
கிளைமேக்ஸ் கேப்டன் அமெரிக்கா மற்றும் ரெட் ஹல்க் சண்டைக்காட்சி பிரமாண்டத்தின் உச்சம், நீண்ட நாட்களுக்கு பிறகு மார்வெல் ரசிகர்களுக்கு ஓர் விருந்து. அதே நேரத்தில் மார்வெல் படங்களுக்கே உள்ள ஹியூமர் காட்சிகள் இதில் மிக குறைவு, அதனால் என்னவோ அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இது அமையுமா என்பது கேள்விக்குறி.
மேலும், கிளைமேக்ஸ் ப்ரீ கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி தவிற படத்தின் வாவ் மொமண்ட் என்பதே குறைவாக உள்ளது. டெக்னிக்கல் விஷயங்களாக கேமரா, இசை, எடிட்டிங், CG வேலைகள் என அனைத்தும் சூப்பர்.
க்ளாப்ஸ்
- புதிய கேப்டன் அமெரிக்கா சூப்பர்.
- கிளைமேக்ஸ் சண்டைக்க்காட்சிகள்
பல்ப்ஸ்
- இன்னும் கொஞ்சம் ஹியூமர் சேர்த்திருக்கலாம்.
- ஆஹா ஓஹோ காட்சிகள் கொஞ்சம் குறைவு.