கேப்டன் மில்லரை-யை சந்தித்த கேப்டன் அமெரிக்கா ! ஹாலிவுட்டில் தனுஷின் மாஸ் என்ட்ரி..

By Jeeva Jul 14, 2022 08:20 AM GMT
Report

Captain Miller - Captain America

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், இவர் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் அவஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய Anthony Russo, Joe Russo இயக்கத்தில் உருவாகியுள்ளது தி கிரே மேன் திரைப்படம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து தான் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்படக்குழுவுடன் தனுஷ் கலந்து கொண்டு பேசிய வீடியோ செம வைரலானது.

இதற்கிடையே இன்று தி கிரே மேன் படத்தின் பிரிமியர் ஷோ நடந்துள்ளது, இதில் நடிகர் தனுஷ் அவரின் இரு மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார். காலையில் இருந்து அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது அந்த பிரிமியர் ஷோவில் நடிகர் தனுஷை சந்தித்த Chris Evans கைக்குலுக்கி விட்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் கேப்டன் மில்லரை சந்தித்த கேப்டன் அமெரிக்கா என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

காரில் அதிவேகமாக சென்று போலீசிடம் சிக்கிய நடிகர் கார்த்தி.. அவரே கூறிய உண்மை தகவல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US