ஹிட்டான கேப்டன் மில்லர், மிஷன் படங்கள்.. தோல்வியை தழுவிய அயலான்.. வசூல் விவரம்

Kathick
in திரைப்படம்Report this article
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இருந்து மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. கேப்டன் மில்லர், அயலான், மிஷன் ஆகிய மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
மிஷன்
இதில் அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 19 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த கேப்டன் மில்லர் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக இப்படத்திற்கு கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. ஆனாலும் கூட இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அயலான்
சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் முதல் முறையாக அயலான் படத்திற்காக கூட்டணி சேர்ந்தனர். Sci-Fi கதைக்களத்தில் உருவான அயலான் திரைப்படம் குடும்ப ரசிகர்களையும், குழந்தைகளையும் ஈர்த்தது. ஆனாலும் கூட எதிர்பார்த்த லாபம் இப்படத்தில் கிடைக்கவில்லை என்கின்றனர்.
அதே போல் கேரளாவில் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இடங்களில் சுமாரான வசூல் இப்படதிற்கு கிடைத்துள்ளதாம். இந்நிலையில், அயலான் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 77 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
You May Like This Video