தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்.. இதோ முழு விவரம்
கேப்டன் மில்லர்
நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கேப்டன் மில்லர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது.

புதிய சிக்கல்
தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக தென்காசியில் நடைபெற்று வருகிறது.
அங்கு உள்ள வனப்பகுதியில் படக்குழுவினர் பிரமாண்டமான செட் போட்டுள்ளதாம். இதனால் அங்கு இருக்கிற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படத்தின் ஷூட்டிங்கில் அதிக லைட் மற்றும் வெடிகுண்டுகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
இதனால் தற்போது கேப்டன் மில்லர் பட குழுவினர்க்கு புதிய சிக்கல் கிளம்பியுள்ளதாம்.

ராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு பழக்கமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்