இரண்டு நாட்களில் வசூலை வாரிக்குவித்த கேப்டன் மில்லர்.. எவ்வளவு தெரியுமா
கேப்டன் மில்லர்
தனுஷின் திரை வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர்.
வெறித்தனமான ஆக்ஷனை கொண்ட இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கினார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இரண்டு நாட்கள் முடிவு உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி, இரண்டு நாட்களில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இரண்டே நாட்களில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ள நிலையில், கண்டிப்பாக அடுத்தடுத்த நாட்களில் பல வசூல் சாதனைகளை கேப்டன் மில்லர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    