தளபதி விஜய்யை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன்.. வெளிவந்த புகைப்படங்கள்! காரணம் என்ன
தளபதி விஜய்
நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட்ட உள்ளார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
விஜய்யை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன்
சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வரும் தளபதி விஜய்யை, விஜயகாந்தின் மகனும் தேமுதிக கட்சியின் முக்கிய நபருமான விஜய பிரபாகரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
நாளை கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு விழாவிற்கு, விஜய்யை அழைக்க நேரில் சென்று சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளடு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..



 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    