கார் விபத்தில் சிக்கிய 'வானத்தை போல' சீரியல் நடிகர் ! அதிர்ச்சியளிக்கும் செய்தி..
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் வானத்தை போல.
இதில் முன்பு நடித்த வந்த நடிகர்கள் மாற்றப்பட்டு தற்போது ஸ்ரீகுமார், மன்யா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மனோஜ் குமார் கார் விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் அவர் தனது மனைவி மற்றும் உதவியாளர் ரகுபதியுடன் காரில் சென்னையில் இருந்து தேனீக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இப்பொது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. மேலும் நடிகர் மனோஜ் குமார் கேடி பில்லா கில்லாடி ரங்கா, அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.