ஹரி இயக்கிய யானை படத்தின் மீது வழக்கு! அந்த காட்சியை நீக்குங்க..
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படத்தின் மீது தற்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
யானை
இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் இருவரும் மிக நெருக்கமான உறவினர்கள் என்றாலும், தற்போது முதல்முறையியாக யானை படத்தில் தான் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றனர்.
கடந்த ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆன யானை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மீனவர் அமைப்பு வழக்கு
யானை படத்தில் ராமநாதபுரம் தங்கச்சி மடம் பகுதி மீனவர்களை தவறான தொழில் செய்யும் சமூக விரோதிகள் போலவும், கூலிப்படை போலவும் சித்தரித்து இருக்கின்றனர் என கூறி, படத்திற்கு தடை விதிக்க கூறி தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
மீனவர்களை அவமதிக்கும் வகையில் யானை படத்தில் இருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும், தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என கேட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.