ஷூட்டிங் ஸ்பாட்டில் பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் மூன்று பேர் கைது! அதிர்ச்சி சம்பவம்
விஜய் ஆண்டனி நடிப்பில், சசி இயக்கத்தில் 2016- ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்தது.
தெலுங்கில் 50 லட்சத்திற்கு விற்கப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படம் 20 கோடி வசூல் சாதனை படைத்தது.

பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் படத்தில் நடிப்புடன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், எடிட்டிங், இசை போன்ற அனைத்தும் விஜய் ஆண்டனி செய்துள்ளார்.

படக்குழுவினர் மீது விசாரணை
பிச்சைக்காரன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், சமீபத்தில் அனுமதியின்றி உச்சநீதிமன்ற வளாகத்தின் மேல் ட்ரோன் கேமரா பறக்கவிட்டதால் படக்குழுவில் உள்ள மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுபேஸ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது மூவரையும் ஜாமினில் விடுவித்துள்ளனர்.
கதை ரஜினிக்கு திருப்தி இல்லை.. இயக்குனர் மாற்றப்படுவாரா? ஷாக்கிங் தகவல்