GOAT பட நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.. ஷாக்கிங் தகவல்
நடிகை பார்வதி நாயர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் கட்ந்த 5ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் கோட் படத்திலும் நடித்திருப்பார்.

பார்வதி கடந்த 2022ம் ஆண்டு அவரது வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும், வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் கூறி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் சுபாஷ், நடிகை பார்வதி மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட 7 பேர் தன்னை தாக்கி, கொடுமைப்படுத்தியதாக கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் காரணமாக பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri