உலகப்புகழ் பெற்ற பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!! யார் அந்த நடிகை தெரியுமா?
கேத்தரின் ஓ ஹாரா
ஹாலிவுட் திரையுலகில் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நத்திங் பர்சனல் (Nothing Personal) படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கேத்தரின் ஓ'ஹாரா (Catherine O'Hara).

இவர் ஹாம் அலோன் (Home Alone), பீட்டல் ஜூஸ் (Beetlejuice) போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், ரசிகர்கள் மனம் கவர்ந்த ஷிட்ஸ் க்ரீக் (Schitt's Creek) என்கிற வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 1992ஆம் ஆண்டு போ வெல்ச் (Bo Welch) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
மறைவு
இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் கேத்தரின் ஓ ஹாரா லாஸ் அஞ்சலெஸில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருடைய வயது 71. கேத்தரினின் மரணம் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri