சிவா கார்த்திகேயன் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி நட்சத்திரம்..! வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்..
சிவா கார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் தான் டாக்டர்.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வந்தது, அந்த வகையில் தற்போது பலருக்கும் பிடித்த குக் வித் கோமாளி நட்சத்திரம் Don படத்தில் இணைந்துள்ளார்.
ஆம், குக் வித் கோமாளி ஷிவாங்கி தற்போது இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் காலி வெங்கட், பாலா சரவணன், ஆர்.ஜெ.விஜய் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
.
Happy to welcome #Shivaangi onboard for ? #DON @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial #Munishkanth @RJVijayOfficial @kaaliactor @Bala_actor @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/wOBttYblOS
— Lyca Productions (@LycaProductions) February 10, 2021