1000வது எபிசோடை எட்டிய செம்பருத்தி சீரியல்- கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர்கள், வீடியோல பாருங்க
தமிழ் நாட்டில் இப்போது பிரபலமாக இருக்க கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
கடந்த சில வருடங்களாக தான் இந்த தொலைக்காட்சி பெரிய அளவில் வரவேற்பை பெற தொடங்கியது.
அதற்கு முக்கிய பங்கு செம்பருத்தி என்கிற சீரியலுக்கும் உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இடையில் பல நடிகர்கள் மாற்றம் நடந்தது, ஏன் கடந்த வருடம் சீரியலின் கதாநாயகன் கதாபாத்திரத்தின் பிரபலமே மாற்றப்பட்டார்.
ஒரு காலத்தில் இந்த சீரியல் TRPயில் முதல் இடம் எல்லாம் பிடித்தது. இந்த நிலையில் தான் செம்பருத்தி சீரியல் குழுவினர் ஒரு விஷயத்திற்காக கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அது என்ன விஷயம் என்றால் இந்த சீரியல் 1000வது எபிசோடை எட்டிவிட்டதாம். சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.
வீடியோவே இருக்கு,