பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்..
2025ஆம் ஆண்டு இதுவரை திருமணம் செய்துகொண்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
பிரியங்கா தேஷ்பாண்டே - வசி ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

நடிகர் கிஷன் தாஸ் தனது நீண்ட நாள் காதலியான சுசித்ராவை கடந்த ஜனவரி 31ஆம் தேதி திருமணம் செய்தார்.

நடிகை சாக்ஷி அகர்வால் தனது காதலர் நவ்நீத் மிஸ்ராவை ஜனவரி 2ஆம் தேதி அன்று மணந்தார்.

நாடோடிகள் படத்தில் அறிமுகமான நடிகை அபிநயா, தனது நீண்டகால காதலரான வெகேசனா கார்த்திக் என்பவரை ஏப்ரல் 16ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்டார்.

பறந்து போ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி அபி டாம் சிரியாக் என்பவரை செப்டம்பர் 9ஆம் தேதி அன்று மணந்தார்.

பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிரிக்கெட் கமெண்டேட்டருமான அனிருதா ஸ்ரீகாந்தை கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மணந்தார்.