உடல் எடை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை கௌரி கிஷன்.. பெருகும் ஆதரவு
கௌரி கிஷன்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கௌரி கிஷன். சமீபத்தில் இவர் நடித்த அதர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் உடல் எடை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கௌரி கிஷன் கடுமையாக பதிலளித்தார். இதற்கு பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பெருகும் ஆதரவு
இந்த நிலையில், பாடகி சின்மயி, நடிகர் கவின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் பா. ரஞ்சித், நடிகை குஷ்பூ ஆகியோர் தங்களது ஆதரவை கௌரி கிஷனுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இதில் பாடகி சின்மயி வெளியிட்ட பதிவில், கௌரி கிஷன் அற்புதமாக பதில் கொடுத்தார். இளம் நடிகை ஒருவர் தனது நிலைப்பாட்டில் பின்வாங்காமல் நின்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எந்த நடிகரிடமும் அவரது எடை என்ன என்று கேட்பது இல்லை. ஒரு நடிகையிடம் மட்டும் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை" என பதிவிட்டுள்ளார்.

கவின் வெளியிட்ட பதிவில் "உள்ளும் புறமும் மற்றும் வெளி புறமும் நீ அழகாகவும், ஊக்கமளிப்பவளாகவும் இருக்கிறாய் கௌரி.. எப்போதும் மாறாமல் இரு" என தெரிவித்துள்ளார்.
Inside and out, you’re beautiful and inspiring, Gouri :)
— Kavin (@Kavin_m_0431) November 6, 2025
Always stay the same 💪🏼@Gourayy ♥️
The fact that this deplorable journalist feels entitled to double down on his already shameful remark is beyond shocking. Glad to see the deserving backlash and we should remember that it is all these micro aggressions that lead to heinous crimes against women today. 🤦♂️🤦♂️ Bravo… https://t.co/PtdG89NOyU
— Santhosh Narayanan (@Music_Santhosh) November 7, 2025