விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியபோது கூட மீரா இப்படி செய்தார்- அவரா இந்த முடிவு, பிரபலம் வருத்தம்
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் நாயகன், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டாலும் சிறந்த மனிதர் என்ற பெயரையும் பெற்றவர் விஜய் ஆண்டனி. அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சோகமான விஷயம் அனைவருக்குமே வருத்தத்தை கொடுத்துள்ளது.
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார், நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி மகள் குறித்து பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
மீரா குறித்து டி.சிவா
விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது மனைவி பாத்திமா நிலைகுலைந்து போனார், அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தது மீரா தான்.
விஜய் ஆண்டனியின் மருத்துவ ரிப்போட்டை முழுவதும் படித்துவிட்டு, "நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன், ஒரு பிரச்சனையும் இல்லை என போட்டிருக்கிறது.
எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம், இன்னும் சில மாதங்களில் அப்பா முழுமையாக குணமாகி விடுவார் என தன்னுடைய அம்மாவுக்கு ஆறுதல் தந்தவர். இவர் இப்படி ஒரு முடிவெடுத்தது பேரதிர்ச்சியே என தயாரிப்பாளர் டி.சிவா அவர்கள் கூறியுள்ளார்.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
