அஜித்-ஷாலினி முதல் ஆதி-நிக்கி வரை.. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகளை பட்டியலிட்டால் ஒரு பெரிய லிஸ்ட் வரும். அதை பற்றி பார்க்கலாம்.
அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடிக்கும்போது காதலில் விழுந்தனர். அந்த படத்தின் ஷூட்டிங்கில் அஜித்திற்கு ஷாலினி மீது காதல் வர அவர் அதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் சரணிடம் சென்று அஜித் ஷூட்டிங்கை நிறுத்தும்படி கூறினார் அஜித். ஏன் என கேட்டால் 'எனக்கு ஷாலினி மீது காதல் வருவதற்குள் ஷூட்டிங்கை குடித்துவிடுங்கள்' என சொன்னாராம். அதை அங்கிருந்த ஷாலினியும் கேட்டுவிட்டாராம். இப்படி தான் ப்ரொபோஸ் செய்தாராம் அஜித்.
அதற்கு பிறகு 24 ஏப்ரல் 2000ல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு தற்போது ஓரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
ஸ்னேகா - பிரசன்னா
ஸ்னேகா பிரசன்னா இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தபோது தான் அவர்களது நட்பு காதலாக மாறியது. அவர்கள் 2012ல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஒரு மகள் மற்றும் மகன் அவர்களுக்கு பிறந்திருக்கின்றனர்.
ஸ்னேகா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தற்போது கலந்துகொண்டு வருகிறார். பிரசன்னாவுக்கு திரைப்படங்களில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.
சூர்யா - ஜோதிகா
பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் தான் முதல் முறையாக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக பல வருடங்கள் இருந்து அதற்கு பிறகு தான் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக ஜோதிகா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனால் அதற்கு பிறகு சோலோ ஹீரோயின்களாக படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
சரத்குமார் - ராதிகா
சரத்குமார் அவரது முதல் மனைவி சாயாவை 2000 வது வருடத்தில் விவாகரத்து செய்தார். அவர் ஒரு நடிகை உடன் நெருக்கமாக இருப்பது தான் விவாகரத்துக்கு காரணம் என அந்த நேரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அதற்கு பிறகு சரத்குமார் ராதிகாவை 2001ல் திருமணம் செய்து கொண்டார். 2004ல் அவர்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தார். தற்போது இத்தனை வருடங்கள் கடந்தும் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர் ராதிகா மற்றும் சரத்குமார்.
குஷ்பு - சுந்தர்.சி
சுந்தர் சி இயக்கிய சில படங்களில் குஷ்பூ நடித்து இருந்த நிலையில் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
தற்போதும் சுந்தர் சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆதி - நிக்கி கல்ராணி
மரகத நாணயம் என்ற படத்தில் ஒன்றாக நடித்து இருந்தவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. அப்போது நண்பர்கள் ஆகி அதன் பிறகு காதலில் விழுந்து சமீபத்தில் தான் குடும்பத்தின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர்.