Celebrity Master chef Tamil: சமந்தாவின் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்

By Karthick Raja Oct 31, 2026 05:36 AM GMT
Report

Celebrity master chef Tamil First elimination: செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் யார் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்

மாஸ்டர் செஃப்

உலக அளவில் நடத்தப்படும் பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சி செலிபிரிட்டி மாஸ்டர் செஃப். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல சமையல் கலைஞர்கள் உருவாகியுள்ளனர். மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா, கனடா, டென்மார்க் உள்ளிட்ட 70 நாடுகளில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

Celebrity Master chef Tamil: சமந்தாவின் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் | Celebrity Master Chef Tamil First Elimination

செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்

தமிழில் சமீபத்தில் தொடங்கி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள செலிபிரிட்டி மாஸ்டர் செஃப். சமந்தா இந்த நிகழ்ச்சியில் செலிபிரிட்டி நடுவராகவும், செஃப் வெங்கடேஷ் பட், செஃப் ஸ்ரீயா அட்கா மற்றும் செஃப் சசி செல்லையா ஆகியோர் நடுவர்களாகவும் உள்ளனர். மிர்ச்சி விஜய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Celebrity Master chef Tamil: சமந்தாவின் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் | Celebrity Master Chef Tamil First Elimination

போட்டியாளர்கள்

ரேஷ்மி, RJ தீபக், பாலாஜி முருகதாஸ், அபி, மதிச்சியம் பாலா, தீனா, ரவி மரியா, வினோதினி, சித்தார்த்தா, சியாரா, ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி ஆகிய 12 போட்டியாளர்கள், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக போட்டியிட்டு வந்தனர்.

Celebrity Master chef Tamil: சமந்தாவின் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் | Celebrity Master Chef Tamil First Elimination

இதில், கடந்த வாரம் RJ தீபக் முதல் எலிமினேஷன் என்றும் அனைவரும் ஷாக்கானார்கள். ஆனால், அதன்பின் பிராங்க் (Prank) என சமந்தா அறிவித்தார். இதனால், கடந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை. இதனால், இந்த வாரம் கண்டிப்பாக 12 பேரில் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என உறுதியாக கூறப்பட்டு இருந்தது.

முதல் எலிமினேஷன்

இந்த நிலையில், 12 போட்டியாளர்களில் நன்றாக சமைத்த டாப் 6 ரேஷ்மி, தீனா, ரவி மரியா, அபி, சியாரா, சித்தார்த்தா ஆகியோர் Safe Zone-க்கு சென்றனர். மீதமுள்ள பாலாஜி முருகதாஸ், மதிச்சியம் பாலா, வினோதினி, RJ தீபக், ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி ஆகியோர் எலிமினேஷனில் போட்டியிட்டனர்.

Celebrity Master chef Tamil: சமந்தாவின் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் | Celebrity Master Chef Tamil First Elimination

இதில், ஜூலியின் சமையல் நடுவர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. அவர் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US