திடீரென அறிவிக்கப்பட்ட சர்வானந்த்-ரக்ஷிதா ஷெட்டியின் திருமண தேதி- எப்போது, எங்கே திருமணம்?
சர்வானந்த்
தமிழில் எங்கேயும் எப்போதும் என்ற படம் மூலம் நல்ல ரீச் பெற்ற ஒரு நாயகன். இப்படத்திற்கு பிறகு சில படங்களில் சின்ன வின்ன வேடத்தில் நடித்தாலும் சரியான வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் கனம் என்ற படம் வெளியானது, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் வெளியாகி இருந்தது.
தற்போது சர்வானந்த் தனது 35வது படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

திருமணம்
கடந்த ஜனவரி 26ம் தேத இவருக்கும் ரக்ஷிதா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது, எனவே ரசிகர்கள் திருமணம் நின்றுவிட்டதா என பேச ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் தான் இவர்களது திருமணம் வரும் ஜுன் 2 மற்றும் 3ம் தேதி ஜெய்பூரில் Leela Palaceல் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்